கலை கலை கலை....

எப்படிபட்ட படைப்பாளியாக இருந்தாலும், அவருக்கென்று ஆதரவு, எதிர் குழுக்கள் இருக்கும்...

இரண்டு தரப்புமே அவரின் வாசகர்கள் அல்லது ரசிகர்கள்தான்...

ரசனையின் உச்ச கட்டம் தான் விமர்சனம் என்பேன்..

ஆதரவானாலும், எதிர்ப்பானாலும் இரண்டுமே படைப்புக்கான பலன்...

கைப்பேய்‬


12356957_504487463057154_4506605144855243332_o

 உலகெங்கும் கையடக்க தொலைபேசியின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
யாரும் இதனை வெறுப்பாரில்லை.

அத்தியாவசிய பொருட்களுள் ஒன்றாக கையடக்க தொலைபேசி மாறி, தற்போது மனிதர்களின் அங்கங்களின் ஒன்றாகவே ஆகிவிட்டது.

தலைப்பிழந்த கதை 02

அந்த மனிதர் சாரத்தை மடித்து அதன் ஓட்டைகள் தெரியாதபடிக்கு மேல் தூக்கி கட்டி இருந்தார்.

சாரத்தில் படிந்திருந்த அழுக்கு அதன் உண்மை நிறத்தை மாற்றி இருந்தது...

சட்டையின் மேல் பொத்தான்கள் இல்லாமல் பாதி திறந்த நிலையில் இருந்தது.

தலைப்பிழந்த கதை 01

மாலை 7 மணி இருக்கும்....

மாலுக்கடை தாண்டி ஐந்துலாம்பு சந்தியோடு செல்லும் ஏதோ ஒரு பாதையில் நடந்து கொண்டிருந்தேன்.

மதுக்கடை முன்னால்...

விண்கல்லும் வித்தக பெருமாளும் - பாகம் 2


 
'தமிழனே தமிழன்.. 1300 வருடங்களுக்கு பிறகு நடக்கும் விடயத்தையும் முன்கூட்டியே ஆரூடம் சொல்லி இருக்கிறானே..'

வித்தகனார் திருமொழிந்தார்.

'சொல்லி என்ன பயன். இப்போது இவ்வாறான பொருட்கள் விழுவதும் வாடிக்கைதானே..?'

ரம்பம்

ஏற்றத்தாழ்வுகள்
எப்போதும் சகஜம்தான்... - இதனை
எல்லாத் தாழ்வான பொழுதுகளிலும்
ஏனோ ஏற்றுக் கொள்ள
இயல்வதில்லை.


விண்கல்லும் வித்தக பெருமாளும் பாகம் 1

2103 ஜனவரி 10
காலை ஆறு மணிக்கெல்லாம் அவர் தயாராகிவிட்டார்.
வழமையாக அணியும் காலின் கால்பங்கை மறைக்கும் பாதணி, அதற்கு மேல் மறைக்க றப்பர் காற்சட்டை, மேலே றப்பர் கோர்ட் என்று எல்லாம் இருளின் நிறத்தில் இருந்தது.

அவரின் பெயர் மட்டும்தான் வித்தக பெருமாள்..

அடங்கா ‪காதல்‬, முடங்கிய விதம்...

http://www.vikeywignesh.com/2016/01/blog-post_10.htmlபாரதியின் ஒரு வரியும்,
பாடலின் இன்னொரு வரியும்,
புதிதைப் போலவே
அதனைப் பதிந்தேன்...

இதுதான் கவிதை என்று
இவள் சொல்லிதான் எனக்கே தெரியும்...

யூஓன்

'இன்னும் 10 மணித்தியாலங்களில் என் பூவை சந்திப்பேன்' 

யுஓன், 12 மணித்தியாலங்களுக்கு முன்னர் மெசேஞ்சரில் அனுப்பிய செய்தியை இப்போதுதான் பார்த்தேன்... 

யுஓனுக்காக ஆயிரம் மைல்கள் தாண்டி பூத்த மலர் நான்...

நாங்கள் ‪அனேகர்‬...

நேசிப்பின்‬
நெற்றியில்‬ ஏறி நின்று
நிமிர்ந்து பார்த்தேன்....

அந்த காதல்‬,
எறும்பை காட்டிலும்
சிறிதாய் தெரிவதை காண
சிரிப்புதான்‬ வந்தது...


அய்டா 2035

http://www.vikeywignesh.com/2016/01/2035.htmlகோவர்தனின் டயரியாய் இருப்பதே எனக்கு பெருமை.இன்னுமொரு பெருமையும் இருக்கிறது.

இந்த அறையில் இருக்கும் எத்தனையோ எண்மான (Digital) இயந்திரங்களுக்கு இடையில் நான் மட்டும்தான் காகித நூல்.
என் பெயர் “அய்டா 2035”

என்னில் எழுத அவர் உபயோகிக்கும் எழுத்தாணிதான் என் காதலி.
என்னை கீறி நினைவுகளை பதிப்பதில் ‪#‎அவள்‬ ‪#‎ஆசை‬ அளாதி.
கோவர்தன் ஒரு ‪#‎விஞ்ஞானி‬.