அழிப்பு

தரையில் கிடக்கும்
தலைகளையெல்லாம்
நான்தான் துண்டித்தேன்...

வண்டிகளின் சக்கரங்களையும்
துண்டிக்கச் செய்தது
நான்தான்...

என் முன்னே
துப்பாக்கியை நீட்டிய
சின்னப்பயல் சிப்பாயைக்கூட
சின்னாப்பின்னம் செய்தேன்...

குடைக்குள் மழை

குடைக்கு கீழ அவளோட போக கூச்சமாகவே இருந்தது...

மழை ஒருபக்கம் நனைச்சதாலும், குடை ஒருபக்கம் மறைச்சதாலும் அர்த்தநாதீஸ்வரரப் போல இருந்தேன்..

அவளும்தான்...

பஸ்ல இருந்து இறங்கி ஸ்டேண்டல நின்று மழையை பார்த்து பயந்தப்போ, அந்த இரக்கம் பிறந்திருக்கனும் அவளுக்கு...

ஐம்புலனும் அகத்தடக்கி

அத்தைக்கு ஆக்கிவச்சேன்,
ஆட்டுக்கும் புல்லுவச்சேன்,
அர வயசு புள்ளைக்கும்
அலுக்காம ஊட்டிவிட்டேன்.
சித்தைக்கு வளருமந்த
சீவனுக்கு சோறுவச்சேன்,
சித்தம் வச்சி செஞ்சதெல்லா,
சீக்கிரமா தீர்த்துட்டிக.
ஒத்தசொல்லும் சொல்லாம
உங்க பாடு போறிகளே,
ஒருத்தி இங்க நின்னுருக்கா,
ஒங்க வாயி தெறக்காதோ?

மட்டக்குச்சி

காலடிகளே படாத அந்த பாதையின் கடைசி பகுதி எப்படி இருக்குமோ?

அவ்வப்போது என்மனம் ஆராய்ந்துக் கொண்டே இருக்கும் கேள்வி அது.

ஐந்தாம் வகுப்பில் படிக்கும் என் மகளின் எதிர்காலம், அந்த கடைசிப் பகுதியில்தான் இருக்கும்.