கூடுவிட்டு கூடுபாய்தல்(Video)

பிரபு இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம் ஒன்றில் இந்த கூடுவிட்டு கூடுபாயும் சங்கதி சொல்லப்பட்டிருக்கும்.

எனக்கு 10 வயதிருக்கும் காலத்தில் அந்த படத்தை பார்த்தேன்.

அண்மையில் ஜெயம்ரவி – அரவிந்சுவாமி நடிப்பில் அவ்வாறான ஒருபடம் வந்தது.

சூரியன் FMமும் நானும் - பாகம் 5

சூரியன் FMமும் நானும் - முன்னைய பாகங்கள்

நான் ஏன் எழுதுகிறேன்....?

அவ்வப்போது என் மனநிலையின் அடிப்படையில் இந்த கேள்வி எழுவதும், அதற்கான பதிலும் அமைகிறது.
பாடசாலைக் காலங்களில் கவிதைகள் எழுதுவதில் ஊக்குவிக்கப்பட்டேன்.
ஆனால் சரியாக வழிநடத்தப்படவில்லை என்பது இப்போது புரிகிறது.
9ம் வகுப்பு படிக்கும் போது ஏதோ ஒரு சிறிய கவிதையை எழுதியதால், எனது தமிழ் ஆசிரியர் நவமோகனால் முதல்தடவையாக ஊக்குவிக்கப்பட்டு, கவிதை எழுதத் தொடங்கினேன்...

ஆவிகளுக்கு வாசம் உண்டா?

நேற்றிரவு உறங்கப்படுத்து இன்று அதிகாலைக்கு முந்திய இரவு 2 மணி வரையில் விழித்துதான் இருந்தேன். உறக்கம் வர ஆரம்பித்த முதற்சில நொடிகளில் உறங்கிக் கொண்டிருந்தேனா? இல்லையா? என்பதில் ஒரு சிறுகுழப்பம் இருக்கிறது. ஆனால் என்னால் நன்கு உணரவும், நுகரவும் முடிந்தது... ஏதோ ஒரு பௌடரின் மென்மையான மணம் தீவிரமாக எனது அறையில் வீசியது.. இந்த வேளையில் எப்படி இந்த மணம் என்ற உள்மனக்கேள்வியோடு, தலையணையில் இருந்து தலையைத் தூக்கினேன்... பின்னால் திரும்பி கதவு வாயிலைக் காண சற்று தயக்கமாக இருந்தது.... இதற்கான பதிலைத் தேடிக் கொண்டிருக்கிறேன். முன்னரும் இவ்வாறான வாசனையை உணர்ந்திருக்கிறேன்.

சூரியன் FMமும் நானும்... பாகம் 4

2006ல் அப்பா இறந்தப் பின்னர், அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து எம்மை வெளியேற்ற முயற்சிகள் இடம்பெற்றன... 

முகாமைத்துவமும், வேலைக்காலத்தில் அப்பாவிற்கு எதிரிகள் போல் இருந்தவர்களும் அதற்கான பெரும் சூழ்ச்சிகளை மறைமுகமாகவும், நேரடியாகவும் மேற்கொண்டனர். 


மாற்றுவழிகள் எவையும் இல்லாமல், செய்வதறியாத மனநிலையுடன் நாட்களை கடத்திக் கொண்டிருந்த காலப்பகுதி அது...