அடங்கா ‪காதல்‬, முடங்கிய விதம்...

http://www.vikeywignesh.com/2016/01/blog-post_10.htmlபாரதியின் ஒரு வரியும்,
பாடலின் இன்னொரு வரியும்,
புதிதைப் போலவே
அதனைப் பதிந்தேன்...

இதுதான் கவிதை என்று
இவள் சொல்லிதான் எனக்கே தெரியும்...

நான் போட்ட பதிவுகளை
நானே மறந்த பின்பு,
'ஷேர்' செய்து ஞாபமூட்டும்போதுதான்
எனக்கே நினைவுக்கு வந்தது...
எனக்கொரு காதலி இல்லையே...

மணம் முடிந்து
மனைவி இருந்த போதும்,
காதலி இல்லை என்ற குறை
கனநாட்கள் நீடித்தன...

யாருமே சீண்டாத என் பதிவுகளை
இவள் மட்டும் சீண்டுகிறாள்...
விசயமில்லா வரிகளுக்கும்
விரும்பி கருத்திடுவாள்...
நிமிடத்துக்கு நிமிடம்,
குழுக்களுக்கு குழு,
அவளே 'ஷேயார்' செய்வாள்..
இப்படி 'ஷேயார்' செய்தால் - நான்
எப்படி லைக் கொடுப்பேன்..?

இத்தனை வருடத்தில்
எத்தனையோ பார்த்திருப்பேன்,
எவ்வளவு கடிதங்களை
எழுதிப் பறக்கவிட்டேன்.....?
எவளாச்சும் ஒருத்தி,
இதயம் வைத்தாளா?
இல்லையே...

உருண்டு போன
ஒரு வருட பதிவுகளின் பின்,
இன்பொக்ஸுக்குள்
எட்டிப்பார்த்த உன்
'ஹாய்' என்ற வார்த்தையே
ஆரம்பித்து வைத்தது... - என்
அடங்கா அணுக்களின்,
முடங்கா பெருவெடிப்பை....

கோதையே,
பேதையே
கோமானின் திருமகளே...
கோமாளியாய் நானும்,
ஏமாளியால் நீயும்..
இருக்கும் வரைக்கும்,
எமக்கிடையில் என்ன குறை...??

மூன்றாம் நபர் ஒருவர் – என்
முட்டாள்தனத்தை,
உன்னிடம் வந்து
ஒப்புவிக்கும் வரைக்கும்,
நீயாய் அறிந்துக் கொள்ள
நிச்சயமாய் வாய்ப்பே இல்லை...

அதுவரைக்கும் இந்த
அடங்கா காதல்
அடங்காமலே தொடரும்...

பொறுமையாய் கெஞ்சி – உன்
புகைப்படத்தைப் பெற்றப் பின்தான் தெரிந்தது..
போலிக் கணக்கு வைக்க
எனக்கு மட்டுமா தெரியும்?
என் மனைவிக்கும்தான்...

இதோ, - என்
பிடரியைப் பிடித்து
பின்னால் திருப்புகிறாள்...
அடங்கா அணுக்களை
முடங்கப் பண்ணுகிறாள்...

ஹையோ... யம்மா....
அடிக்காதே...
அழுதிடுவேன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக