நாங்கள் ‪அனேகர்‬...

நேசிப்பின்‬
நெற்றியில்‬ ஏறி நின்று
நிமிர்ந்து பார்த்தேன்....

அந்த காதல்‬,
எறும்பை காட்டிலும்
சிறிதாய் தெரிவதை காண
சிரிப்புதான்‬ வந்தது...
உச்சந்தலையில்‬ உள்ள
ஒற்றை முடியாய்,
கோடி முடிகளுக்கு மத்தியிலும்
கொஞ்சம் தனித்துதான் போனேன்....

நீரில்‬ அலம்பிய முகத்தில்,
மூக்கு‬ விளிம்பின்
முற்றத்தில் நிற்கும்
நீர்த்திவலை‬ போல,
நீங்கிச் செல்லும் பரிதாபத்தில் உன்
நினைவுகள்....

நினைத்து உருகி
ஒளி மங்கிப்போன
கண்களுக்கு‬ கீழே,
அழையாமல் வந்த
கறுவளையங்களாய்‬ - சில
கெட்ட பழக்கங்கள்...

உன்
காதுகளுக்கும்‬
கழுத்துக்கும்‬ இடையில்
எவ்வளவு தூரமென
எண்ணிய - என்
இதழ்களுக்குதான்‬
எத்தனை இழப்புகள்‬....?


உதடுகளை‬ பிரிக்காமல்
உம்மென்றே - நீ
இருந்துவிட்ட போதும் - உன்
உள்ளம்‬
உளறிக் கொட்டியவை - என்
உயிர்‬ வரை கேட்டன...
நீ அறிவாயா?

தாமரை‬ மலருக்குள்
தவறி வீழ்ந்த ஓர் துளி போல்,
இந்த தனி‬ அறைக்குள் நான்.....!

ஒரு கட்டத்துக்கு பின்,
தனிமையை‬
உணர்ந்ததே இல்லை.....
நான்‬ தனித்திருக்கையில்‬,
நீ தந்துவிட்டு போன தனிமையே - என்
தனிமைக்கு துணைக்கிருக்கும்‬.....
ஆகவே

நாங்கள் அனேகர்‬...

‪#‎விக்கிவிக்னேஷ்‬

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக