ரம்பம்

ஏற்றத்தாழ்வுகள்
எப்போதும் சகஜம்தான்... - இதனை
எல்லாத் தாழ்வான பொழுதுகளிலும்
ஏனோ ஏற்றுக் கொள்ள
இயல்வதில்லை.




மனிதனின் இந்த
மட மன நிலையே
பக்குவமில்லா நிலையை
பார்வைக்கு நிறுத்துகிறது... 

பக்குவம் என்றால் என்ன...?

எவை எவை செய்யலாம்,
எவை அவை நீக்கலாம்
என்றந்த புரிதலா....???


தீர்மானிப்பின் தீரமா...???
அநுமானிப்பின் அச்சொட்டா...?

தாழ்விலும்
சலிப்படையா
சலனமற்ற குணமா..???
சங்கடம் காணாது
பொங்கிடும் மனமா?

இங்கனப் பக்குவங்கள்
எத்தனையோ கண்டதுண்டு... 

அந்தந்த பொழுதுகளில்
அதுவாக வந்து போகும்...

ஏற்பட்ட பக்குவத்தை
என்னோடே தங்கச் செய்ய,
தோற்றுப் போகும் துர்நிலைதான்
தூரம் செல்ல மறுக்கிறது...

மார்க்கம் மறக்கிறது...
மடவச்சம் பிறக்கிறது...

எத்தனை நாட்களுக்குதான்
இந்த ஈர்வாள்
இப்படியே அறுக்கும்...

ஈர்வாள் நீக்கிப்
போர்வாள் தூக்கி
புறப்படும் நேரமா,
அருங்காட்சியகக்காரன்
அங்கு வந்து நிற்க வேண்டும்..?

போர்வாளின்
புராதனம் சொல்லி,
வீரம் நீக்கி,
ஆர்வம் காட்டி
அப்படியே பிடிங்கிப் போனான்...

வெற்றுக் கைக்கொண்டு,
வேர்பறிக்கச் செல்கிறேன்...

அர்த்தமே இல்லை இந்த
அரைவேகல் கவிதையில்...
ஆகவே ஓய்கிறேன்...

இந்த ரம்பம்
இத்தோடு ஓய்கிறது.....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக