2103 ஜனவரி 10
காலை ஆறு மணிக்கெல்லாம் அவர் தயாராகிவிட்டார்.
வழமையாக
அணியும் காலின் கால்பங்கை மறைக்கும் பாதணி, அதற்கு மேல் மறைக்க றப்பர்
காற்சட்டை, மேலே றப்பர் கோர்ட் என்று எல்லாம் இருளின் நிறத்தில் இருந்தது.
கறுப்பு வெள்ளை கட்டைகளைத் தட்டி கின்னரப்பெட்டியிடம் (பியானோ) பேசிக் கொண்டிருந்தேன்.
கதவு தட்டும் சத்தம்...
பியானோ வைக்கப்பட்டிருக்கும் அறையில் இருந்து எட்டிப் பார்த்தால் முன்னறை ஜன்னல் வழியாக வெளியில் நிற்பது யாரென்று தெரியும்...
எழுந்து நின்று எட்டிப்பார்த்தேன்...
கதவுக்கு அருகில் கார்திகா..
ரோஜா நிற சேலை, அதற்கு மேல் ஒரு குளிரங்கி... கறுப்பு நிறக் கைப்பை.. செங்கல் அளவில் ஒரு திரன்பேசி.. ஆனால் மெல்லியதாக...
திறன்பேசியின் முனையை அவள் கடித்தபடி இருந்தாள்....
கதவுகளை திறந்து கொண்டு படியேறி யாரோ ஓடி வருவது போல ஒரு சத்தம்.
இரவு 1 மணி
படுக்கை அறையில் இருந்து எழுந்து முன்னறை விளக்கை ஏற்றாமலேயே யன்னலில் பார்த்தேன்....
ஒன்றும் தெரியவில்லை...
மின்விளக்கை ஏற்றிவிட்டு பார்தேன்...
அப்போதும் தெரியவில்லை
கதவினைத் திறந்து வெளியில் சென்று பார்த்தேன்...
கீழ் வாயிற்கதவு திறக்கப்பட்டிருந்தது..
அதை பூட்டிவிட்டு படியேறும் போது காற்றின் வேகம் கதிகலங்க வைத்தது...
எல்லா கதவுகளையும் இறுக்கி மூடி என் படுக்கை அறைக்கு வந்து
கணக்குகளை நீ எழுதும் அழகில் - எல்லாக்
கவிதைகளும் தோற்றுப் போகும்..
விரலுக்குள்ளேயே திரளும் சூத்திரங்கள்...
வாய்க்குள்ளேயே வாய்ப்பாட்டுக் பாத்திரங்கள்...
ஆஹா...
எத்தனை வேகம் -இந்த
கணக்கிடும் கைகளுக்கு...
எத்தனை கணக்குகள்,
கண்ண மூடினா இந்த ஃபைலோட கலர்தான் கண்ணுக்கு தெரியுது. இதெல்லாம் வீசிட்டு எங்கயாவது போயிடனும் பா…. என் முனுமுனுப்பு என்னோடு மட்டும் இல்லை…. பக்கத்தில் இருந்த ஜானகியும் கேட்டிருந்தாள்.