கரீமா

கரீமா ஒரு வானொலி பெண் அறிவிப்பாளர்.
தேன் மாதிரி அவள் குரல்.
அதில் மயங்கிய பாருக்.
காலையில் ஒலிபரப்பாகும் அவளின் நிகழ்சியோடவே எழும்புவான்.
அவள் குரலை பதிவு செய்து வைத்து எந்த நேரமும் கேட்பான்.
அதனோடே தூங்குவான்.
அவளோடு காதல் வயப்படுகிறான்.

அவளை ஒருமுறை சந்திக்க கிடைக்கிறது.
அவள் பர்தாவில் முழு முகத்தையும் மூடிக்கொண்டு அவனுடன் கதைக்கிறாள்.
அவன் அவள் கண்களை பார்த்துக்கொண்டே இருக்கிறான்.
“என்ன ஒன்றுமே பேசுறீங்கலில்ல” – (அவள்)
“நீங்க என்ன கல்யாணம் பண்ணிப்பிங்களா?” – (அவன்)
” நொன்சென்ஸ்” – (அவள்)
சொல்லிவிட்டு காரியாலயத்துக்குள் சென்றுவிடுகிறாள்.
ஆனால் அன்று முதல் அவன் அவளை பின் தொடர்கிறான்.
பல மாதங்கள் ஆகிவிட்டன
ஒருனாள் அவன் தொல்லை தாங்க முடியாத கரீமா
” உனக்கு இப்ப என்ன வேணும்? ஏன் என்ன இப்படி டோச்சர் பண்ற?”
” நாம கல்யாணம் பண்ணிக்கலாம்……..” – (அவன்)
ஆத்திரமடைந்த கரீமா தன் பர்தாவை நீக்கி
” இந்த முகத்த கட்டிக்கிற தைரியம் இருக்கா உனக்கு”
அசிட் வீசப்பட்டு சேதமாகி போன அவள் முகத்தை காட்டி கேட்கிறாள்.
அவன் எதுவும் பேசாமல் ஒரு நிமிடம் அவளை பார்த்துவிட்டு அந்த இடத்தில் இருந்து நகர்கிறான்.
துயரத்தின் உச்சிக்கே சென்ற அவள் அங்கும் நிற்க முடியாமல், வீட்டுக்கும் போக முடியாமல் தவிக்கிறாள்.
மீண்டும் தன் அலுவலகத்துக்கே போய் அழுகிறாள்.
மாலை ஆனதை அறிந்து அவள் தன் வீட்டுக்கு செல்கிறாள்.
வீட்டுக்கு முன்னே புதிதாக வழமைக்கு மாறாக நிறுத்த பட்டிருந்த வாகனங்களை கண்டு ஒருகணம் திகைத்தாலும், புத்திசாலி ‪#‎பெண்‬ புரிந்துகொள்கிறாள்.
பாருக் தம்மை நேரடியாக பெண்கேட்டு வந்திருக்குறான் என்பதை அவள் வீட்டுக்குள் செல்வதற்கு முன்னமே உணர்ந்துகொள்கிறாள்.
அவளுக்கும் விருப்பம் இல்லாமல் இல்லை.
ஒரு நொடி அவள் மனம் மகிழ்ந்து அவளை அறியாமல் சிரித்து விடுகிறாள்.
ஆனால்….
அவள் முகம் குறித்த நினைப்பு மேலோங்க சிரிப்பு சின்னாபின்னமாகி விடுகிறது.
அவன் இப்போது இருக்கும் காதலில் என்னை திருமணம் செய்து கொண்டாலும், இந்த முகத்தை எத்தனை நாட்களுக்கு சகித்துகொள்ள முடியும் அவனால்.
சிறிது காலத்தில் என்னை வெறுத்துவிடுவான்.
பின்னர் முகத்துக்காகவும், அவனுக்காகவும் இரண்டு வலிகளை சுமக்க வேண்டி வரும்.
இப்போது இருக்கும் ஒரு வலியே போதும் என்று முடிவு செய்கிறாள்.
வீட்டுக்கு அருகில் சென்று பாதனியை வெளியில் வைக்கும் போது பாருக்கும் அவன் தந்தையும் அருகருகே அமர்ந்திருப்பது முன் பக்க ஜன்னலில் அவளுக்கு தெரிந்தது.
பாருக் போலவே அவன் அப்பாவும் வடிவானவர்.
அந்த முகங்களை கண்டு தன் முடிவை இன்னும் உறுதி படுத்தி கொள்கிறாள்.
“வா அம்மா”
தன் தோளில் கை வைத்து அழைத்த அந்த உருவம் கண்டு திகைக்கிறாள் ‪#‎கரீமா‬….
தன்னை போன்றே முகத்தோள் எரிந்து போன அந்த பெண்ணை பார்த்து “யார் நீ பாவம்” என்கின்றன கரீமாவின் கண்கள்..
“என்னம்மா பார்க்குற…? நான் தான் பாருக்ட உம்மா”…..
உம்மாவை கட்டி அணைப்பதைவிட கரீமாவால் வேறு என்ன முடிவை எடுக்க முடியும்?