என்னோடு நீ இருக்க....

பொதுவிடம் பாராமல்
மெதுவிரல் ‪#‎தொடு‬,

‪#‎எல்லைகள்‬ மீறுவேன்,
பொறுமைகள் ‪#‎பழகு‬….

சிறுவனாய் இருந்து
‪#‎சில்மிஷம்‬ செய்..


‪#‎காதல்‬ கொண்டே
காலத்தை கொலை செய்…

காதல் பக்கங்களை
கண்டபடி காட்டு…

‪#‎துணை‬ வர உறுதியாய்
சுட்டுவிரல் மாட்டு,

முடிவுகள் இன்றி
முழுமையாய் நேசி…

முடியை கோதி
‪#‎முகம்‬ வைத்து சுவாசி…

புதுமைகள் சேர
‪#‎புகைப்படம்‬ எடு…

நீங்கா நினைவுகளை
நெஞ்செங்கும் நடு…

முழுமை அற்றவள்,
முதலில் அதை உணர்,

ஆனாலும் கூட
அகலாது ‪#‎நில்‬

என் உடல் சுற்றி
உன் கரம் போடு

கோபத்தின் போதும்
நீங்காது இணை…

சிற்றுண்டி தேடி
சிறகடித்து பற…

காலையை தொடக்க
கடிதங்கள் அனுப்பு…

அனைத்தை பற்றியும்
அளவின்றி பேசு

‪#‎ஹாசியம்‬ பேசி
அழகுற சிரி

சத்தியம் விட்டு
சாகடிக்காதே…

எதை கொண்டும் என்னை
எடை போடாதே…

காலையில் முத்தத்தை
கடமையாய் கொள்

குற்றங்களில் கூட
உற்றவானாய் இரு…

உண்ணும் உணவை
பங்கிட்டு புசி…

யாரென்று அறிந்தே
என்னை நீ ‪#‎நேசி‬

அரவணைக்க தவறி
அடி வாங்காதே…

ஒருவருள் ஒருவர்
உறங்கவும் செய்வோம்…

‪#‎தலையணை‬ தெரிக்க
‪#‎சண்டைகள்‬ புரிவோம்…

நொடிநொடி தவறுவேன்,
அடிக்கடி மன்னி…

தூர நிற்பதை
உணராபடிக்கு..

தொலைநிலை சொல்லி
தொல்லைகள் புரி…

சிரிப்பை மறந்தே வளர்ந்துவிட்டேன்,
அடிக்கடி சிரிக்க வை…

முன்னால் தனிமையை உணர முன்னமே
பின்னால் வந்து கட்டிப்பிடி…

தனியே விட்டு நடவாதிரு…
தவித்து போவேன், ‪#‎விலகாதிரு‬..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக