சூரியன் FMமும் நானும் - பாகம் 6

நேற்றையக் காற்றில் நான்

2004-05ஆக இருக்க வேண்டும், சரியாக நினைவில் இல்லை.

சூரியனின் நேற்றையக் காற்று நிகழ்ச்சி மீதான விருப்பு அதிகரித்தக் காலம் அது.மப்ருக் அண்ணா நிகழ்ச்சியை ஒருநாள் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தப் போது, அவர் வழங்கிய தலைப்புகளுக்கு சில ஹைக்கு (என்று கருதி) கவிதைகளை எழுதினேன்.

எஸ்.எம்.எஸ் அனுப்பிவிட்டு வாசிக்கும் வரை காத்திருந்ததாக ஒரு ஞாபகம். சரியாக நினைவில் இல்லை.

அப்போது நேற்றையக் காற்று ஒலிக்கும் நேரத்தில், சூரியன் கலையகத்தில், ஒலிங்வாங்கிக்கு அருகில் அமர்வேன் என்றோ, அதில் அறிவிப்பு செய்வேன் என்றோ கற்பனையும் செய்ததில்லை.

2009ம் ஆண்டு அது நடந்தேறியது.

முன்பு வேலை முடித்து வீடு செல்லும் இரவில், எங்களுக்கு வழங்கப்படும் வாகனங்கள் அனைத்தும், அலுவலகத்தில் இருந்து சற்று தூரத்தில் ரீகல் திரையரங்கிற்கு அருகில் நிறுத்தப்பட்டிருக்கும்.

பெரும்பாலும் நவா அண்ணா உள்ளிட்ட அனைவரும் ஒன்றாகவே செல்வோம்.

என் தோளில் கையைப் போட்டுக் கொண்டு கதைத்தப்படி வந்த நவா அண்ணா, 'நேற்றையக் காற்று நிகழ்ச்சியை செய்றிங்களா' என்றார்...

ஒருவேளை இது நவா அண்ணா எடுத்த பிழையான முடிவாக இருக்கலாம்...

பெரும் தயக்கமாக இருந்தாலும், முயற்சித்துப் பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்து, மறுநாளே அதற்கான தயார்ப்படுத்தல்களை மேற்கொண்டேன்...

அஷ்ரஃப் உடனும், முகுந்தன் உடனும் இணைந்து சில வாரங்கள் நேற்றையக் காற்று நிகழ்ச்சியில் கவிதைகளை வாசித்து அறிவிக்கப் பழகினேன்...

மப்ருக் அண்ணா என் வேண்டுகோளுக்கு அமைய கவிதைகளைக் கேட்டு மகிழ்ச்சியையும், பாராட்டையும் குறுந்தகவல் மூலம் அனுப்பிக் கொண்டே இருந்தார்....

அப்போது 2004-05ல் மப்ருக் அண்ணாவின் தலைப்புகளுக்கு எழுதிய ஹைக்கு கவிதைகள் நினைவுக்கு வந்தன....

ஒருவித ஈர்ப்புவிசையற்றப் பரப்பில் பறந்துக் கொண்டிருந்தேன்.

தொடரும்....

சூரியன் FMமும் நானும் - முன்னைய பாகங்கள்
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக