அவனது கடிதம் 1


வேண்டாம்...

அவசரப்பட்டு படத்தை அனுப்பிவிடாதே..

நான் உன் அளவுக்கு ஒன்றும் யோக்கியன் அல்ல..

நேரில் பார்த்தப் பிறகும் இதே அளவு என்னிடம் நேசம் இருக்கும் என்று என்னால் உறுதியாக கூற முடியாது...


நான் நினைத்து வைத்திருப்பது போல் அல்லாமல் நீ கறுப்பாகவோ, கலையிழந்தோ, குண்டாகவோ, மிகவும் ஒல்லியாகவோ... ஏதோ ஒன்றாய் இருந்து, எனக்கு பிடிக்காமல் இருந்துவிட்டால்...?

என்னிடம் இருக்கும் இந்த அன்பை கொஞ்சம் கூட இழக்க நான் விரும்பவில்லை...

ஒருவேளை நான் நினைப்பதை விட நீ அழகானவளாக இருந்துவிட்டால்?

நீ அழகு என்றதால்தான் நான் காதலித்தேன் என்ற குற்ற உணர்ச்சி என்னை கொல்லுமே...
அதற்கும் அனுமதித்துவிடாதிரு..

ஆகவே, உன்னை காணும் ஆசை எனக்கு கொஞ்சம் கூட இல்லை...
உன் முகம் கண்டா அன்பு செய்தேன்?

உருவம் கண்டா காதலித்தேன்?

இல்லையே...

உன்மிசையிருக்கும் அன்பை, உன்னை கண்டப்பின் இழப்பேனானாலும், பெருக்குவேனானாலும், அது மிகப்பெரும் பாவம்...

இந்த பாவத்தை செய்யத் தூண்டாதிரு...

யேசுநாதன் சொன்னதைப் போல...

'உன்னை பாவம் செய்யத்தூண்டுவதை பிடிங்கி எறி.'

உன்னை பார்த்தப்பின் நான் வெறுத்தாலும், பார்த்தப்பின் இன்னும் நேசித்தாலும் நான் பாவி ஆகிவிடுவேன்...

ஆகவே பார்க்கும் எண்ணத்தை பிடிங்கி எறி...

என்னை மன்னி...

காணாமலே இருந்து, காணாமலே போய் விடலாம்...

காதலுக்குள் காணாமல் போவதொன்றும் சுமையில்லையே...

அங்கும் அலுவலகங்கள் வைத்து தேட மாட்டார்கள்....

வைப்பது போல பாசாங்கு செய்வார்கள்...

நாம் காணாமலேயே இருக்கலாம்...

************************************************************
-------தொடரும் இந்த தொலைதல் இன்பம்...---------

பதில் கடிதங்கள் 

http://www.vikeywignesh.com/search/label/அவளும்%20அவனும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக