அவிசி காலமானார்....!

பெரும் வலியை ஏற்படுத்தி விடும் சிலரின் இளவயது மரணம்.... 

அவிசியின் மரணமும் அப்படித்தான்... 

ஜேர்மனியின் இசைக் கலைஞரான அவர், வெறும் மின்னியல் சப்தங்களை வரிசைக்கிரமமாக அடுக்கிவிட்டு, அங்கும் இங்கும் சப்த அலைகளை ஓடவிட்டு இதுதான் இசை என்று வாதிடுவோருக்கு மத்தியில் நின்று, ஆழ்மன உணர்வின் அடிவரை சென்றவர்....

28வயதில் நேற்று ஓமனில் விடுதி ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார்... 

மரணத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை..

அவரது குடும்பத்தாரின் அறிவித்தல் படி, மரணத்துக்கான காரணம் வெளியில் சொல்லப்படாது என்று அறிய முடிகிறது. 

என்னளவில், என் உணர்வுகளை சொல்லும் போது, இலகுவில் தவிர்த்துச் செல்ல முடியாதவர்களே என்னைக் கவர்ந்தவர்களாக இருக்கின்றனர். 

எழுத்தாளர்கள், இசைஞர்கள், யாராக இருப்பினும், வெறும் புகழுக்காகவும் அவர்களின் படைப்புத் திறமைகளுக்காகவும் மட்டுமே நான் யாரையும் ரசிப்பதில்லை.


அவிசி, சில ஆண்டுகளே அறிமுகம் என்றாலும், என் ஆழ்ந்த உணர்வுகளுக்கு அருகில் சென்று பயணித்தவர்...

அதற்கு மேலதிகமாக, இசைக்கருவிகள் என்று எதனையும் முறையாக பயிலாமல் இந்த அளவு உணர்வு மிக்க படைப்புகளை கொடுத்தவர், என் இசை வாழ்க்கையிலும் மிகப்பெரிய தன்னம்பிக்கை உருவாக காரணமானவர். 
அவரிடம் இருந்து நிறையக் கற்றிருக்கிறேன்... 

அவரது நண்பர்களான சில இசைக்கலைஞர்கள் அவரைப்பற்றி செவ்விகளில், அவரது 'மிருகத்தனமான குடிவெறி' குறித்து கவலை வெளியிட்டிருக்கின்றனர்.

இதுதான் அவரது மரணத்துக்கு காரணமா? என்று சொல்லப்படவில்லை... 

என்னவோ,,

ஆத்மாக்களுக்கு 'சாந்தி' என்பது தேவையாக இருந்தால், இருந்தவரை எம் உணர்வுகளைத் தட்டியெழுப்பிய அந்தக் கலைஞனின் ஆத்மாவும் அதனை அடையட்டும்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக