நண்பி

ஒரு நண்பி இருந்தாள்…
வெளியிடத்தில் இருந்த அவளின் காதலன் தொல்லை கொடுத்தான்.
அவனும் என் நண்பன்தான்… நல்ல நண்பனும் கூட…. இப்போது இல்லை…
என்னிடம் வந்து புலம்புவாள்..
முடிந்தவரை ஆறுதலாய் இருக்க முயற்சித்தேன்…
சில நாள், பலநாள்….
நட்பு விரிவடைய, அவளை நல்ல நண்பியாக பார்த்தேன்…
நல்ல நண்பனாய் நடந்தேன்….

எனக்கும் இன்னொரு பெண்ணில் காதல் இருந்தது….
இடையில் திடீரென முறிந்தது….
“என் மேல லவ் வந்ததாலதான் அவள விட்டுட்டியா” நண்பி கேட்டாள்…
வருத்தப்படவில்லை….
பெரிதுப்படுத்தவில்லை….
“இல்லை” என்றேன்….
“சாரி” என்றாள்…
மீண்டும் நட்பு….. தொடர்ந்தது….
நாள்தோரும் செட்டிங்…. கோல்கள், குறுஞ்செய்திகள்….
தொடர்ந்தது….
“அவன என்ன செய்றது? வீட்டாக்கள் வேண்டாம் என்றாங்கள்” காதலன் குறித்து என்னிடம் கேட்டாள்…
“நீ ஒரு முடிவை எடுத்துட்டு எனட்ட சொல்லு, நான் உனக்கு சப்போர்ட்டிவா இருப்பேன்” நான் சொன்னது…
யோசித்தாள், அவனை விட்டு விலகுவதாக முடிவெடுத்து என்னிடம் கூறினாள்…
“அதுதான் உன் முடிவுனா அதுக்கு நா சப்போர்டிவா இருப்பேன், பட் இந்த முடிவ நீ மாற்றிக்க கூடாது” நான் கூறியது….
அவளும் ஒப்புக் கொண்டாள்,
“உனக்கு நல்ல ஒரு வாழ்க்கை காத்துகிட்டு இருக்கு..” நான்…
“எப்படி சொல்ற?” அவள்…
“அப்படித்தான்…. பொறுமையா இரு….” நான்…
“ஏதோ சொல்ற…. ம்…” அவள்..
நட்பு நாளுக்கு நாள் விரிவடைந்தது….
என்மீது அவள் எவளவு அன்பாக இருந்தாள் என்பதில் இப்போதைய சூழ்நிலைகள் சந்தேகத்தை ஏற்படுத்தினாலும், அப்போது அப்படி தெரியவில்லை….
நான் அவள் மீது அன்பாகத்தான் இருந்தேன்…
இல்லை, மிகவும் அன்பாக இருந்தேன்…
இந்த சம்பவங்களுக்கு சமாந்தரமாக அவளது காதலனுக்கும் எனக்கும் இடையிலான முறுகலும் அதிகரித்து..
ஆனால் வேறு காரணங்களுக்காக….
இவளுடன் நட்பு வளர, அவனுடன் பகை வளர்ந்தது….
இரண்டுக்கும் தொடர்பு இல்லை….
நாளாக நாளாக அவனை என் நண்பி மறந்தே போனாள்….
என்னுடனே இருப்பாள், பெரும்பாலும் எல்லா பொழுதுகளும் ஏதோ ஒரு வழியில் என்னுடனே கழியும்…
ஆரோக்கியமான நட்பாக அது இருந்தது…
என்னிலும் நிறைய மாற்றங்கள்….
அவளின் வீட்டாரும் சந்தோசமாக இருந்தார்கள்…. அவளும் சந்தோசமாக இருந்தாள்… இடையில் எனக்கு ஏற்பட்ட காதல் கைவிடலுக்கும் அவளே ஆறுதல்….
என் காதல் கைவிடலே அன்றி, தோல்வி இல்லை என்பதை குறிக்குக..
திடீரென நண்பியின் தொடர்பு குறைவடைகிறது…
அவள் என்னை முகம் கொடுக்க அஞ்சிகிறாள்…
புரிந்தாலும் நான் எதையும் பொருட்படுத்தவில்லை….
மனதுக்குள் மெல்ல மெல்ல கவலை அதிகரித்து….
அவளிடமே கேட்டுவிட்டேன்….
“ஏன் பேச மாட்ற? நான் எதாவது தப்பா பேசீட்டேனா?” நான்…
“அப்படியெலாம் இல்லடா….” அவள்….
அவள் என்னிடம் இருந்து விலக நினைக்கிறாள், புரிகிறது….
பரவாயில்லை… அவள் யார் எனக்கு… போகட்டும்….
கொழும்புக்கு வரும் போது யாரையும் கூட்டிக் கொண்டு வரவில்லை… ஊருக்கு போகும் போது யாரையும் கூட்டிக் கொண்டு போவதும் இல்லை….
இவள் போனால் என்ன? இருந்தால் என்ன?….
அவளுக்கும் எனக்குமான சம்பந்தம் அடியோடி போய்விட்டதாக கருதினேன்…
சிலகாலம் அவள் இல்லாத நாட்கள் என் வாழ்க்கையில்….
பிரகாசமாக இருந்திருக்க வேண்டும்…
அதோ, மீண்டும் வருகிறது இருள்…
மீண்டும் அந்த வெளியிட காதலனுடன் அவள் இணைந்துவிட்டாள்…
செய்தி அறிந்து பதைபதைத்தேன்….
என் பதைபதைப்பு, அவள் வழங்கிய உறுதி மொழியை மீறிவிட்டாள், மீண்டும் அவனோடு சேர்ந்துவிட்டாள், என்னை விட்டுவிட்டாள் என்றெல்லாம் இல்லை….
நான் வருத்தப்பட்டதெல்லாம் இந்த விஷயத்தை என்னிடம் அவள் கூறவில்லை.
என்னிடம் கூறி இருந்தால் நான் அனுமதித்திருக்க மாட்டேன் என்று அவள் கருதினாள்…
இல்லை….
நான் அவளை காதலிப்பதால், இதற்கு விட்டிருக்க மாட்டேன் என்று கருதினாள்….
இல்லை அப்படி அவனது காதலன் அவளிடம் கூறி இருக்கிறான்…
அதனை அவள் நம்பினாள்…
மனம் வெதும்பியது…
“இனி உன் முகத்த கூட பார்க்க கூடாதுனு நினைக்கிறேன்” நீண்ட தொலைபேசி உரையாடலின் இறுதியில் நான்…..
“அப்படி சொல்லாத டா, ப்ளீஸ்” அவள்….
அதன்பின்னர் அவள் என்ன யோசித்தாள், என்ன பேசினாள், என்று எனக்கு தெரியாது…. அதற்கு முன் தொலைபேசியை துண்டித்துவிட்டேன்….
————–
எத்தனை நாட்கள் ஆகியது என்று தெரியாது…. அப்படி ஒருத்தி இருந்தாள் என்பதையே நான் மறக்கும் ஆரம்பகட்டம்….
“டேய்… நீ என்னட்ட வரலனா நான் இந்த கயிறுல கழுத்த மாட்டி செத்துறுவன்….” இருண்ட சூழ்நிலையில் அவள் ஒரு கயிறோடு வந்து நின்றாள்….
“ஹேய் அப்படி எதும் செய்துடாத… நான் உன்னோட கோபம் எல்லாம் ஒன்னும் இல்ல”
திடீர் அதிர்ச்சி… விழிப்பு…. விடியற்காலை கனவு….
சிறிது மனம் தடுமாறியது….
அவள் முகத்திலும் விழிக்க கூடாது என்றுவிட்டோமே…. சரி விடுவோம்… அவளை பாதுகாக்க அவளது காதலன் இருக்கிறான்…
நான் எதற்கு அவதிப்பட….
சிலநாட்கள் கழிகின்றன….
“என்னா செய்ற” குறுஞ்செயில் அவள்….
“நத்திங் டீ…. ஜஸ்ட் எட் ஒபீஸ்…. நோ வோர்க்…” என் பதில்…
அவளிடம் மறுபதில் இல்லை….
“நீ எப்படி இருக்க” மீண்டும் நான்…
“இருக்கேன்…” அவள்…
“ஏன், ரிப்லே ஒரு மாதிரி இருக்கு?” நான்…
“எனக்கு என்ன நடந்திச்சினு தெரியுமா உனக்கு?” அவள்…
என்றோ ஒருநாள் கண்ட கனவு நினைவுக்கு வந்தது….
“சுயிசைட் பண்ணிக்க ட்ரை பண்ணினியா?” கிண்டலாக நான்…
“ஆமா” அவள்…
அதிர்ந்தேன்… அவள் கூறிய தினமும், என் டயரிக் குறிப்பும் ஒன்றித்தன….
அவளுக்கு நடப்பது எனக்கு முன்கூட்டியே புலப்படுகிறது….
இதற்கு முன்னும் சில சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன…
ஆனால் இதுதான் உச்சக்கட்டம்….
“ஏன்… என்ன நடந்திச்சு? நான்தான் அப்பவே சொன்னேனே…. நீ என்ன தப்பா நினைச்ச….? என் குறுஞ்செய்தி….
“திட்டாத டா” அவளது பதில்…
“ உன்ன திட்ட நான் யார்” நான்….
“ ஏன் இப்படி பட்டும் படாம பேசுற…? அவள்…
“நோ நோ…. அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல…” நான்…
“இல்ல, நீ எதையோ மறைக்கிற…. குட் பிரண்ட்ஸ் வோன்ட் ஹைட் எனிதிங் மங்கீ….” அவள்…
“தெயா ஆர் சம் எக்செப்சனல்ஸ் டியர்” நான்….
“இப்ப நல்லா ஹர்ட் பண்ண கத்துகிட்ட டா…” அவள்….
“இப்பதான் பழகுறேன் டீ…” நான்….
பதில்கள் இல்லை….
இப்போது சில நாட்கள் இல்லை…. நீண்ட நாட்கள்…
அவளோடு இடைக்கிடையில் பேச்சுவார்த்தைகள் இருந்தன….
திடீரென ஒருநாள் அவளுக்கு திருமணம்… நான் கேள்வி பட்டேன்… பத்திரிகை வைத்து சென்றதாக அலுவலகத்தார் கூறினார்கள்…
ஆனால்… அதற்கு முன்னரே…. எனக்கு திருமணம் முடிந்துவிட்டது…. அவளுக்கு தெரியும்…. நான் கூறி இருக்கிறேன்…
காதல் திருமணம் தான்….
“எனக்கு வரக்கிடைக்குமானு தெரியல… உனக்கு கல்யாணம் நடக்கும் போது நான் இந்தியால இருப்பேன்…. பட் உனக்கு நல்ல லைப் கிடைக்கும்னு நான் முன்னவே சொன்னது இததான்…. ஐ விஸ் யு ஆல் த பெஸ்ட்…. ஹெப்பீ மெரீட் லைப்…”
திருமணத்தன்று காலை என் குறுஞ்செய்தி…..
“ஹேய்… நீ வரணும்னு நான் எதிர்பார்த்தேன்…. பரவாயில்ல…” அவளது பதில்….
“மறக்காம இருந்தால் சரி….” நான்…
“உன்ன எப்படிடா மறப்பேன்… எனக்கு கிடைச்ச ஸ்பெசல் பிரண்ட் நீ” அவள்….
“ஓ… கே…. சீ யு….”
முடிந்து போனது உறவு….
இன்னுமொரு நண்பி இருந்தாள்………… வருவாள்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக