சனநாயகம்

தூரத்தே யொரு 
துயரம் போலும்.... 

யாதெனப் பார்க்க முன் 

எழுந்தன ஓலங்கள்... 
அந்திப் பொழுதிலோர்
அவலத்து நேரம்...
மந்திரச் சோலைகள்
மயானமாய் மருவின... 
திக்குகள் இழந்த
சிறுவண்டு போல
மக்கள் ஆட்சியோர்
மய்யப் பெட்டிக்குள்... 
ஆணிகள் அறைந்து
இறுக்கினும் தடுக்கத்
திராணிகள் இன்றித்
திரும்பினேன்....
கோலம் இருண்டபின்
குறுவொளி போல
ஓலக்குரல் என்னை
ஒருகணம் அழைத்தது.. 
மேலும் கீழுமாய்
மிரண்டு விழித்து
ஓலக்குரல் திசை
ஒதுங்கினேன் சற்றே... 
சவப்பெட்டி உள் நின்று
சனநாயகம் சொல்லிற்று... 
"நோகாமல் என்னை
நொறுக்கிப் புதைத்தாலும்
சாகாமல் மீள்வேன்...
சாகாமல் மீள்வேன்..."

விக்கிவிக்னேஷ்
28-11-2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக