அவளின் கடிதம் 4


ஏனடா என்னை இம்சிக்கிறாய்..?

இத்தனைக் கடிதங்கள் அனுப்பியும் ஏன் இன்னும் பதில் வரக் காணோம்?

அவ்வளவு பிடிக்காதவாளாய் ஆனேனா நான்?

சில வாரங்களுக்கு முன்னால், இருவரும் சிலிர்த்துப் பரப்பிய கடிதங்களை அசைவிட்டப்படியே சிந்தைக் கடக்கிறது நாட்களை...

உனக்கு என்னாயிற்று?


என்னை நீ வெறுத்திருக்க வாய்ப்பே இல்லை.

ஆயினும் ஏன் பதிலில்லை.

நமக்கு இடையில் படப்பகிர்வு பேச்சு ஆரம்பித்த தினம் முதல் இப்படித்தான்...

என் எல்லாக் கனவுகளுக்கும் முரணாக பேச ஆரம்பித்தாய்...

காணாமலே தொலைதலை இன்பம் என்கிறாய்...

கண்டே தீர வேண்டும் என்ற நினைப்பில் நான் இருந்தேன்...

உன் உருவத்தை நான் காண வேண்டாம்..

என் உருவத்தை நீ காண்...

காதலில் விழுந்தப் பின் எந்தப் பெண்ணுக்கும் ஆணின் முகம் தேவையில்லை...

நீயும் நேசிக்கிறாய் என்ற நீனைப்பே போதும்...

உன் முக உருவம் எனக்கு தேவையில்லை கண்ணா..

நீ என்னை நேசிக்கிறாய் என்பதை நிஜமாகவே அறிவேன்...

அந்த நினைப்புடனே என் நேசத்தை எல்லைகள் இல்லாமல் வளர்த்துக் கொண்டுவிட்டேன்..

ஆனால், உன் மனதில் என்னுடையதைத் தவிர பிறர் நிழலும் வராக்கூடா...

அதற்காகத்தான் என் நிழல்படம் அனுப்புகிறேன் என்றேன்...

நீ மறுத்துப் பேசுகிறாய்...

உன் வேலை பளுவிற்கு இடையில் கல்லாகிப் போய்த் துடிக்கும் இதயம், எனைப் பார்க்க சற்றேனும் இலகாதா? என் அன்பே.

அதற்காகத்தான் அனுப்புகிறேன் என்றேன்...

நீ வேண்டாம் என்றாய்....

உடன்பட்டுப் போனேன்...

உன்னிடம் அன்றி வேறெவரிடமும் இங்கனம் நான் இலகிச் சென்றதில்லை...

எல்லைத் தாண்டி என் திமிரை விட்டுக் கொடுத்துவிட்டேன்...

வெட்கம் அற்றுப் போய் மீண்டும் மீண்டும் கடிதம் எழுதுகிறேன்...

என்னை இழந்த என் கடிதங்கள் ஒவ்வொன்றும் உன்னை இன்புறுத்தி இருக்குமே...

இன்பம் உனக்கு மட்டும்தானா?

சுயநலவாதியா நீ?

இன்பத்தை தான்பெற்று இம்சிப்பை எனக்களிக்கிறாயே?

இருக்காது...

நீ அப்படிப்பட்டவன் அல்லன்...

உன்னலம் கொள்ளாமல் என்னலம் பேணும் என்னவன் நீ....

நான் எழுதும் எதுவும் உன்னை கிட்டவில்லையா?

அல்லது நீ எழுதும் எதுவும் எனை வந்து சேரவில்லையா?

எமக்கு இடையில் ஏதேனும் புதிய தடை உருவாகிவிட்டதா?

நான் தெளிவாய் இருக்கிறேன் அன்பே...

தொடர்பறுந்து போய் இருந்தாலும், தொடரும் நம் காதல் என்பதில்...

ஆனால்,

ஆனால் எத்தனை நாட்களுக்குதான் இந்த தெளிவு இருக்கும்? தெரியவில்லை..

குழம்பிப் போய் ஒருநாள் கோபமடையக் கூடும்..

உன்னைத் திட்டித் தீர்த்து இன்னொருக் கடிதம் வரையக் கூடும்...

அப்போது,
என் கோபத்தை புரிந்துக் கொள்...

என்னில் கோபியாதே..

யாரோ ஒரு ஏமாற்றுக் காரனை, நீ என நம்பி நீங்கிச் செல்லும் முன், நீயே வந்தடை.....

பதிலிடு....



-----------------------------
முந்திய கடிதங்களுக்கு

http://www.vikeywignesh.com/search/label/அவளும்%20அவனும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக