
தக்கதாகவோ தகாததாகவோ,
பதில் எதனையும்
அறிந்துக்கொள்ள முடியாத
அனேகமான கடிதங்கள்,
ஒரே கவிதையை உளறிவிட்டு
தற்கொலை செய்துக் கொள்கின்றன...
முற்றுச் சந்திலோ,
முடிவிலி பள்ளத்திலோ,
தன் பாதை தீர்ந்துப் போய்விடும் என்றறிந்தும்,
அந்தக் கடிதங்களின் பயணங்கள்
அமைத்தப்படியே தொடர்கின்றன....
எண்ணங்களின் கனதியாலோ,
இழிவாக்கல்களாலோ,
ஓய்ந்துக் கொள்ளும்
இழுப்புகளுக்கு
இவை இணங்குவதில்லை...
உள்ளது போக
இல்லதைக் கூற முனைவதில்லை
எழுத்தில் இல்லா
இதயம் காட்டவும்
இவை குறைவதில்லை...
உறைக்குள் இட்டு
மறைத்து வைத்தாலும்,
உதரி கிழித்து காற்றில் விட்டாலும்
பதிலறியா கடிதங்களின் நிலை ஒன்றேதான்...
அவை அல்லாடுகின்றன..
வெற்றுக் காதிதம் பேனையின்
உழுதலுக்குள்ளாகி
கடிதம் பிறக்கிறது... - பின்
காற்றில் பறக்கிறது...
பதில் காண்தல் அன்றி
படித்த கடிதம் ஒன்றிற்கு உய்வில்லை...
இதோ,
இப்போதும் ஒன்று...
இதற்கு முன் எத்தனையோ....
எண்ணக் கடிதங்களின்
எண்ணற்ற தற்கொலைகளுக்கு
நீங்களும் உடந்தையா?
கடிதத்தின் வாயில்
கடிதன் படிக்கப்படுகிறான்...
பதிலிடுங்கள்
பதிலனாகிய நீங்களும்
படிக்கப்படுவீர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக