பயங்கரம்


அடுத்தவரை பயமுறச் செய்வதில் அத்தனை இன்பம்.

சிறுவயதில் இருந்து இருக்கும் பழக்கம் இது எமக்கு.

இன்னுமே மாறவில்லை.


கதவுக்குப் மறைந்திருந்து மாற்றரை பே என்று கத்தி, பயமுறுத்துவதும் பள்ளத்தைப் பார்க்கும் போது தள்ளிவிடுவது போல செய்வதும் மிகப்பழமையான பழக்கவழக்கங்கள்..

இப்போது சமுக வலைத்தளங்களில் அதே பயமுறுத்தல்கள் தொடர்கின்றன.

முன்பிருந்தே இருந்தாலும் கூட, கடந்த சில நாட்களாக வட்சாப், மெசஞ்சர் போன்றவற்றில் இவ்வாறான பயமுறுத்தும் காட்சியைக் கொண்ட காணொளிகள் பகிரப்பப்பட்டு வருகின்றன.

நாளாந்தம் ஒரே காட்சியோ அல்லது வெவ்வேறு காட்சிகளோ வெவ்வேறு நபரால் அனுப்பப்படுகிறது.

முதலில் தாம் பயந்து, பின்னர் 'யாம் பயந்த இன்பத்தை' மாற்றாரும் கொள்ள வேண்டும் என்ற நினைப்பில், அவை பகிரப்படுகின்றன.

இதில் ஒரு சிறிய இன்பம் பகிர்கின்றவர்களுக்கு இருக்குமாக இருக்கும்.

ஆனால் ஒரு விசயத்தை யோசிக்க வேண்டும்.

நீங்கள் அனுப்புகின்ற இந்த பயங்கர காட்சி, ஒரு கர்ப்பிணிப் பெண்ணை அடைகிறது, அல்லது ஒரு இருதய நோயாளியை அடைகிறது...

அக்கணம் எப்படியானதாக இருக்கும்?

இருதய நோயாளிக்கு மரணம் வரையில் பாதிப்பு ஏற்படலாம்.

ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு கூட பாதிப்பை ஏற்படுத்தும்.

இரவில்  சிறு பிள்ளைகளை அருகில் வைத்துக் கொண்டு அந்த காட்சியை நம்பிப் பார்க்கும் பெற்றாரையோ, மற்றாரையோ நினைத்துப் பாருங்கள்?

அந்தப் பிள்ளை அன்றிரவு உறங்குமா?

இந்தப் பயங்கரக் காணொளியை நீங்கள் யாருக்கோ அனுப்பிவிடவில்லை..

ஏதோ நல்லதைத்தான் அனுப்பி இருப்பீர்கள் என்று உங்களை நம்பும் இன்னொரு மனிதரை நீங்கள் ஏமாற்றுகிறீர்கள்..

அக்கணம் உங்கள் மீதான நம்பிக்கை இழக்கப்படுகிறது.

அடுத்து நீங்கள் அனுப்பியதை அவர் பார்ப்பாரோ இல்லையோ...?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக