இலவச வைஃபை (FREE WIFI)

சில தினங்களுக்கு முன்னர் நான் நானாக இருக்கவில்லை..
பேஸ்புக்கும், மெசஞ்சரும் இன்றி என் நிமிடங்கள் நகராதிருந்தன...
இத்தனைக்கும் அதனை நான் விரும்பி செய்திருக்கவில்லை..
விஷ்ணு என் பெயர்,
சில வாரங்களுக்கு முன்னர்தான் எனது கைப்பேசிக்கு முதல் தடவையாக பேஸ்புக் மற்றும் மெசஞ்சர் செயலிகளை பதிந்தேன்..
கொழும்பில் உணவகம் ஒன்றுக்கு சென்றிருந்த போது, அங்கு இலவச வைஃபை கிடைப்பதாக அறிவிப்பு பலகை ஒன்று தொங்கவிடப்பட்டிருந்தது.
இதனால் எனது கைப்பேசியின் மென்பொருளை புதுப்பித்துக் கொண்டதுடன், பேஸ்புக், மெசெஞ்சர்களையும் பதிவு செய்துக் கொண்டேன்...
அப்போது நடந்த சம்பவம் ஒன்றை சொல்லியே ஆக வேண்டும்...
அங்கு கிடைத்த ஓசி வைஃபையை வைத்துப் பார்க்காமல் பயன்படுத்திக் கொண்டிருந்த போது...
'ஓசியில வைஃபை கிடைச்சா இங்கையே செட்ல் ஆகிடுவிங்க என்ன?'
அந்த உணவகத்தின் பெண் ஒருவர் இப்படிகேட்டப் போது ஆத்திரமாய் வந்தது....
அவள் விளையாட்டாகவே கேட்டிருந்தாலும், முன்பின் தெரியாதவர் என்பதாலும், அருகில் இன்னும் பலர் இருந்ததாலும் எனக்கு சற்று அவமானமாக இருந்தது...
'பின்ன எதுக்கு போர்ட் மாட்டி வச்சிருக்கிங்க' – (நான்)
சற்று சத்தமாகவே கேட்டதால், அந்த இடத்துக்கு வந்த உணவக உரிமையாளருக்கு நடந்த சம்பவம் புரிந்திருந்தது...
மிகக் மோசமாக அந்தப் பெண்ணை அவர் திட்டித்தீர்த்தார்...
நான் சமாதானப்படுத்திவிட்டு அங்கிருந்து வந்துவிட்டேன்...
பின்னர் பேஸ்புக்கோடு வாழ்க்கை வழமைக்கு திரும்பி இருந்தது...
மெசெஞ்சரை பயன்படுத்தும் போது ஏற்கனவே நான் அதில் சேமிக்கப்பட்டிருந்த சிலரது தகவல்கள் அழிந்து போயின...
மெசெஞ்சரில் ஏற்பட்ட தவறாக இருக்கலாம் என்று, அப்போது அதனை புதுப்பித்துக் கொண்டேன்..
சில தினங்களின் பின்னர் கண்பார்த்திருக்கவே சிலரது தகவல் அழிந்தது..
அது முதலில் சந்தேகத்தை ஏற்படுத்தியது..
பின்னர் கடவுச் சொல்லை மாற்றி இருந்தேன்..
எனக்கு அடிக்கடி கடவுச் சொல் மறந்து போய்கொண்டிருந்தது...
மீண்டும் மீண்டும் மின்னஞ்சலில் கோரிக்கை விடுத்து கடவுச் சொற்களை மீள மாற்றிக் கொண்டிருக்க வேண்டியதாக இருந்தது..
எனக்கு வெறுப்பாக இருந்தது...
சில தினங்களில் மீண்டும் அவ்வாறு நிகழ்ந்தது...
மீண்டும் கடவுச் சொல்லை மாற்றவும், பாதுகாப்பு நடைமுறைகளை பலப்படுத்தவும் செய்திருந்தேன்..
சில தினங்கள் கடந்து ஒருசிலருக்கு எனது கணக்கில் இருந்து தகவல் அனுப்பப்பட்டிருந்தது..
குறிப்பாக சில பெண்களுக்கு புகைப்படங்களை அனுப்புமாறு தகவல் அனுப்பப்பட்டிருந்தது.
அவ்வாறு புகைப்படம் கோரப்பட்டிருந்த பெண்கள் இதுவரையில் நான் பேசி இருக்காதவர்கள்...
ஏனைய யாரும் அதற்கு பதில் வழங்கி இருக்கவில்லை.
ஆனால் ஒருவர் மாத்திரம் பதில் அனுப்பிக் கொண்டிருந்தார்...
அத்துடன் அவர் பதில் அனுப்பி சில நிமிடங்களில் அந்த தகவல் கோப்பு அழிக்கப்பட்டுவிடும்...
மூன்றாம் நபர் ஒருவர் எனது கணக்கில் புகுந்திருப்பது புரிந்தது...
ஆனால் நான் கடவுச் சொல்லை மாற்றியும் பயன் இல்லாமல் இருப்பது ஆச்சரியமாகவும் இருந்தது...
எனக்கு குறித்த பெண்ணின் மீது சந்தேகம் எழுந்தது..
அந்த பெண்ணும் ஒரு போலி கணக்காக இருக்கலாம், அல்லது யாரோ திட்டமிட்டு என்னை பிரச்சினையில் கோர்த்துவிட செய்கிறார்கள் என்பது புரிந்தது...
இதனை உறுதிப்படுத்திக் கொள்ள நானும் அந்த பெண்ணோடு கதைக்கலானேன்..
எனக்கு தேவையாக இருந்தது அந்த பெண்ணும், என் கணக்கில் புகுந்த மர்ம நபரும் ஒரே நபரா? என்பதை தெரிந்துக் கொள்ளவதே..
குறித்தப் பெண்ணும் என்னுடன் பேசினார்..
அவரது தொலைபேசி இலக்கத்தைப் பெற்று உரையாடினேன்..
அவர் கண்டிப் பகுதியைச் சேர்ந்தவர்.
அவரது கணக்கு உண்மையானது என்பது புரிந்திருந்தது.
பாதுகாப்புக்காக அவரை ப்ளொக் செய்ய வேண்டி இருந்தது.
எனது கடவுச் சொற்களை எப்படி அறிகிறார்கள் என்பதை தெரிந்துக் கொண்டாலே ஒழிய இதில் இருந்து தப்பிக்க வழியில்லை...
நான் என் வர்த்தக நிலையத்தில் உள்ள கணினியிலும், எனது வீட்டுக் கணினியிலும் தவிர வேறெங்கும் பேஸ்புக்கை திறப்பதில்லை.
அண்மைக்காலமாகத்தான் எனது கைப்பேசியில் பேஸ்புக் பயன்படுத்த ஆரம்பித்திருந்தேன்..
எனது கைப்பேசி ஊடாகத்தான் கடவுச் சொல் மாற்றப்பட்டிருக்க வேண்டும் என்பது உறுதியாக தெரிந்தது...
அத்துடன் குறித்த மூன்றாம் நபருக்கு எனது பேஸ்புக் கடவுச் சொல் தெரியவில்லை என்பதும், அவர் என் மின்னஞ்சல் கடவுச் சொல்லை அறிந்து வைத்துக் கொண்டே விளையாடுகிறார் என்பதும் புரிந்தது...
எனது மின்னஞ்சல் கடவுச் சொல் பல வருடங்களாக மாற்றப்படாமலேயே இருந்தது.
இந்த கடவுச் சொல்லை மற்றவர்கள் அறிந்து கொள்ள அதிக வாய்ப்பு இருக்கிறது..
நான் ஒவ்வொருமுறை பேஸ்புக் கடவுச் சொல்லை மாற்றும் போதும், அவர் மின்னஞ்சல் கணக்கின் கடவுச் சொல்லை வைத்து மீண்டும் பேஸ்புக் கடவுச் சொல்லை மாற்றிக் கொண்டிருந்திருக்கிறார்.
எனது கடவுச் சொல்லை நான் மறந்துவிட்டதாகவே நினைத்து நானும் மாற்றிக் கொண்டே இருந்திருக்கிறேன்..
அதனால் கணக்கை சில தினங்களுக்கு முடக்கி வைத்திருக்க வேண்டி இருந்தது..
வேறொரு கணக்தை ஆரம்பித்து குறித்த பெண்ணோடு தொடர்பு கொண்டு பேசினேன்...
அவர் ஒன்றும் மோசமானவராக தோன்றவில்லை...
பின்னர் என் மின்னஞ்சல் கடவுச் சொல்லை அறிந்த மர்மநபர் யாராக இருக்கும்? என்று அறிய முற்பட்டேன்...
வீட்டிலும், வர்த்தக நிலையத்திலும் கணினிகள் இருப்பதால், வேறெங்கும் சென்று கணினிகளை பாவிக்கும் பழக்கம் இல்லை...
இரண்டு தினங்களுக்கு முன்னர் வீதியூடு நடந்துச் சென்ற போது, இந்த பிரச்சினைகள் எல்லாம் ஆரம்பமான விடுதியைக் கண்டு உள்ளே போனேன்..
அன்று அமர்ந்திருந்த அதே இடத்தில் அமர்ந்து இலவச வைஃபையை மீண்டும் பெற்றபடியே கைப்பேசியில் உலாவினேன்...
நிமிர்ந்து பார்க்க என் தலைக்கு நேரே மேலே சீ.சீ.ரீ.வீ. கமரா இருப்பதைக் கண்டேன்..
எல்லாம் ஒவ்வொன்றாக புரிய ஆரம்பித்தது...
சில வாரங்களுக்கு முன்னர் இதே விடுதியில் எனது கைப்பேசியின் மென்பொருளை புதுப்பித்த போது, மின்னஞ்சல் கணக்கின் கடவுச் சொல்லை வழங்க வேண்டி இருந்தது.
இதனை சீ.சீ.ரீ.வியில் அவதானித்த ஒருவரே அதனை செய்திருக்கிறார் என்பதை புரிந்து கொண்டேன்..
மீண்டும் என் மின்னஞ்சல் கணக்கின் கடவுச் சொல்லை மாற்றி அமைத்துவிட்டு எதுவும் நடக்காதது போல நகர்ந்து வந்தேன்..
எனது அதிர்ஷ்ட்டம் சில நிமிடங்களில் எனக்கு பேஸ்புக் கணக்கிற்கு பிரவேசிப்பதற்கான எச்சரிக்கை மின்னஞ்சலில் கிடைத்தது..
மீண்டும் கடைக்குள் பிரவேசிக்கும் போது என்னோடு இன்னும் சிலரையும் கூட்டிக் கொண்டே போய் இருந்தேன்..
உணவகத்தில் இருந்த அத்தனை பேரையும் வரவழைத்து குறித்த நபரை பிடித்தோம்...
அவர் அந்த உணவகத்தின் உரிமையாளராக இருந்தார்...
அன்றையதினம் என்னால் திட்டுவாங்கிய பெண் அவரது காதலியாக இருந்தாள்...
என் கடவுச் சொல்லை திருடி செயற்படுத்திய திட்டத்துக்கான காரணம் புரிந்தது...
கூட வந்தவர்கள் அவர்களை எச்சரித்தார்கள், அடிக்கவும் செய்தார்கள்...
நான் ஏதும் சொல்லாமல் திரும்பி வந்துவிட்டேன்...


கொழும்பில் நகைக் கடை ஒன்றில் பங்காளராக இருக்கிறேன்..



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக