பிச்சைக்காரன்


கேட்டுப் பறிப்பதில் நான்
கெட்டிக்காரன்
கெஞ்சித் திரிந்திடும் ஓர்
சுட்டிக்காரன்
இருந்தும் மறைக்கும் ஓர்
இச்சைக்காரன்
எனினும் என் பெயர் ஓர்
பிச்சைக்காரன்
கிழிந்த வேட்டியை தான்
அணிந்திருக்கிறேன்
உடைந்த ஓட்டினை தான்
ஏந்தி நிற்கிறேன்
புழுதி தரையில் நான்
புரண்டு எழுகிறேன்
பரந்த உலகில் நான்
பரிதவிக்கிறேன்.
சொல்லி அழ எனக்கு
சொந்தம் உண்டா?
சோகம் துடைத்து வைக்கும்
பந்தம் உண்டா?
எல்லி நகைக்குது பார்
அங்கோர் சனம்
ஏழனம் செய்வது ஏன்
இது விசனம்.
பட்டினிக்கும் எனக்கும்
பந்தம் உண்டு
காலம் தவறாமல்
வந்ததுண்டு
இருந்தும் எனக்கெதுவும்
தந்ததுண்டா