ப்ளுவேல் விளையாட்டு (Blue Whale Challenge) – எச்சரிக்கை

'உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒன்றை புரிய கடமைப்பட்டிருக்கிறார்கள். அவருக்கு உரிய கடமையை அவர் செய்தாக வேண்டும். சோம்பேறியாகவோ, முயற்சிகள் இன்றியோ, சமூக அக்கறை இன்றியோ வாழும் மனிதர் உலகின் சுமை...'



இப்படி ஒரு நிலைப்பாட்டை எத்தனையோ திரைப்படங்களின் கருபொருளாக பார்த்திருக்கிறோம்.

தமிழில் வந்த அந்நியன், ஆங்கிலத்தில் எத்தனையோ படங்கள்...

குறிப்பாக உலகத்தை சுத்தப்படுத்துவதாக தெரிவித்து, பெரும்பாலும் (விவிலியத்தின் ஒருசில வசனங்களை அடிப்படையாக கொண்டு) கடும்போக்குடன் செயற்படும் ஒரு குழுவும் அதனைக் கட்டுப்படுத்தும் கதாநாயகனையும் கொண்ட எத்தனையோ ஆங்கிலத் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இதுதான் ப்ளுவேல் விளையாட்டின் மையக்கரு.

இந்த விளையாட்டை விளையாடும் நபர், உலகத்துக்கு தேவையானவரா? சுமையானவரா? என்பதை விளையாடியவரை வழிநடத்திய பொறுப்பாளர் (curator) முடிவு செய்கிறார்.

பொறுப்பாளர் ஒருவராகவோ, ஒரு குழுவாகவோ இருக்கலாம்.

இந்த விளையாட்டை நான் விளையாடியதில்லை.

இது சமுக வலைத்தளங்கள் ஊடாக ஹாஸ்டெக்ஸ் மூலம் பரவுவதாகவும், சிலர் இதற்கான மென்பொருள் ஒன்றை திறன்பேசியில் பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

எவ்வாறாயினும், பரவலான இணையத் தேடுதலை அடுத்தே இதனை எழுதுகிறேன்.

இந்த விளையாட்டுடன் எனக்கு சொந்த அனுபவங்கள் இல்லை.

குறித்த விளையாட்டுக்கான பதிவை மேற்கொண்டதன் பின்னர், உங்களது சுய விபரங்கள் மாத்திரம் இன்றி குறித்த கைப்பேசி அல்லது கணினி ஊடாக நீங்கள் சேமித்த அல்லது சேமித்திருந்து அழித்த அனைத்துவிதமான சொந்த விடயங்களும் ப்ளுவேல் விளையாட்டை வழிநடத்துகின்ற குழுவிற்கு கிடைத்துவிடுகிறது.

உங்கள் கணினியிலோ கைப்பேசியிலோ என்றோ ஒருநாள் நீங்கள் பார்த்த ஆபாசப்படமாக இருக்கலாம், யாருடனோ நீங்கள் பேசிய நிர்வாண உரையாடலாக இருக்கலாம், உங்கள் அன்பிற்குரியவர்களின், அல்லது அன்பிற்குரியவராக இருந்தவர்களின் அந்தரங்க விடயங்களாக இருக்கலாம்... எதுவானாலும், என்றோ ஒருநாள் நடந்து பின்னர் நீங்கள் அதனை முற்றாக அழித்துவிட்டதாக கருதப்படும் விடயங்களைக் கூட, ப்ளுவேல் குழு தங்களது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்துவிடுகிறது.

ஹெக்கர்கள் என அறியப்படும் இணையவழி தாக்குதல்தாரிகளால் இந்த விளையாட்டு வழிநடத்தப்படுகின்றமையே இதற்கான காரணம்.

அதன் மாதிரிகளை உங்களுக்கு காண்பித்து, உங்களைக் கட்டுப்படுத்துகிறது.

கிடைக்கப்பெற்றத் தரவுகளின் அடிப்படையில் நீங்கள் 50 நாட்களுக்கு நிறைவேற்ற வேண்டிய கட்டளைகளைத் தீர்மானித்து, நாளாந்தம் உங்களுக்கு வழங்குகிறது.

இரண்டு வகையான பட்டியல் இருப்பதாக அறிய முடிகிறது.

ஒன்று, உங்களை நீங்களே துன்புறுத்திக் கொள்ளும் வகையிலான பட்டியல்...

இந்த பட்டியல் நீங்கள் உலகத்துக்கு தேவையில்லாத நபர் என்று தீர்மானித்து விட்டால் வழங்கப்படுவது.

அதன் இறுதியில் தற்கொலை என்ற கட்டளை இருக்கும்.

தற்கொலை செய்துக் கொள்ளாவிட்டாலோ, 50 நாட்களில் உங்களுக்கு வழங்கப்பட்ட கட்டளைகளில் ஒன்றை நிறைவேற்றாவிட்டாலோ, உங்களது அந்தரங்க விடயங்கள் சமுக வலைத்தளங்களில் பகிரப்படும்.

மற்றையப் பட்டியல் நாளாந்தம் உங்கள் வாழ்க்கையை செழிப்பாக்கும் வகையிலான ஊக்கிகளாக இருக்கின்றன.

இதன் இறுதியில் நீங்கள் போட்டியில் வெற்றிப் பெற்றவராக அறிவிக்கப்பட்டு விடுவிக்கப்படுவீர்கள்.

(இரண்டு பட்டியலும் கீழே இருக்கின்றன.)

ஆனால் இங்குவதான் உளவியல் ரீதியான அணுகுமுறை கையாளப்பட்டு, விளையாடுகின்றவர் கட்டுப்படுத்தப்படுகிறார்.

இந்த விளையாட்டை உருவாக்கியவர், ரஷ்யாவில் உளவியல் மாணவராக இருந்து, கல்லூரியில் இருந்து நீக்கப்பட்ட ஒருவர்..

(விபரங்களை விக்கிபீடியாவில் பெற்றுக் கொள்ள முடியும்)

அவர் உளவியல் ரீதியாக ஒருவரை அணுகி, அவரது நன்மதிப்பைப் பெற்று, பின்னர் படிப்படியாக கடுமையான சவால்களை வழங்கி, இறுதியில் அவருக்கான முடிவை வழங்குவதையே இந்த விளையாட்டின் தன்மையாக வைத்து உருவாக்கி இருக்கிறார்.

பின்னர் இது உலகளவில் ஹெக்கர்களினால் கட்டுப்படுத்தப்படுகிறது.

இந்த விளையாட்டுக்கு என்று தனிப்பட்ட இணையத்தளம் ஒன்று இருப்பதாக தெரியவில்லை.

ஆனால் சமுக வலைத்தளங்களில் அரட்டை (செட்) வடிவில் தொடர்பு கொள்ளும் யாரோ ஒருவரோ அல்லது ஒரு குழுவோ, அல்லது ஒரு பொட் எனப்படும் செயற்கை நுன்னறிவு கொண்ட மென்பொருளோதான் விளையாடுபவரை கட்டுப்படுத்துகிறது.

இணையத்தளங்களில் அதிகம் ப்ளுவேல் குறித்த தேடலில் ஈடுபடுகின்றவர்கள், சமுக வலைத்தளங்களில் ப்ளுவேல் ஹாஸ்டெக்கை க்ளிக் செய்கின்றவர்கள், போன்றவர்கள் இதன் கீழ் இலக்கு வைக்கப்படுகின்றனர்.

ஒரு திமிங்கிலம் எதற்காக கரை நோக்கி வருகிறது.

கரை நோக்கி வரும் எல்லா திமிங்கிலங்களும் இறந்துவிடுவதில்லை.

சில தப்பி விடுகின்றன.

சில கரையில் விழுந்து காப்பற்றப்படுகின்றன.

சில இறந்து போகின்றன.

கரைப் பகுதியில் அனர்த்தத்துக்கு உள்ளான திமிங்கிலங்களின் அவலக்குரல் கேட்டு மேலும் சில திமிங்கிலங்கள் கரைக்கு வருகின்றன.

இதுதான் ப்ளுவேல் விளையாட்டின் அடிப்படை...

இங்கு நீலத்திமிங்கிலங்கள் கடவுளுக்கு நிகரான அற்புதமாக நம்பவைக்கப்படுகின்றன.

இந்த நீலத்திமிங்கிலம்தான் அதனை விளையாடுகின்றவருக்கான கட்டளைகளை இடுகின்றன.

அந்த கட்டளைகளை நிறைவேற்றாத பட்சத்தில் அதற்கான தண்டனையையும் அதுவே வழங்குவதாக நம்பவைக்கப்படுகிறது.

விளையாடுகின்றவரை நீலத்திமிங்கிலமாக மாற்றுவதாகவே உறுதியளிக்கப்படுகிறது.

இதில் சிக்கிக் கொள்கின்றவர்களுக்கு அதீத அன்பும், மிக நெருக்கமான உறவும் நீலத்திமிங்கிலத்திடம் இருந்து வழங்கப்படுவதாக நம்பவைக்கப்பட்டு, அவர்களின் தனிமை போக்கப்படுகிறது.

உளவியல் ரீதியான அரவணைப்பால் இந்த விளையாட்டில் இருந்து வெளியேற மனம் வராதவர்கள் (குறிப்பாக சிறார்கள்) அந்த கட்டளைகளை தட்டாமல் செய்கின்றனர்.

இறுதியில் தற்கொலை செய்துக் கொள்கின்றனர்.

இந்த விளையாட்டை சவாலாக எடுத்துக் கொண்டு விளையாட்டுத்தனமாக விளையாட நினைப்பவர்கள், விபரீதத்தில் சிக்கிக் கொள்கிறார்கள்.

நீங்கள் தப்பே செய்யாதவரானாலும், இந்த விளையாட்டை விளையாட நீங்கள் பயன்படுத்தும் கருவி புத்தம் புதிது என்றாலும், உங்களை அவர்களின் வலையில் சிக்க வைக்க ஆயிரம் வழிகள் உள்ளன.

ஹெக்கர்களால் எந்த வழியையும் பயன்படுத்த முடியும்...

வீட்டின் தொலைக்காட்சியை பயன்படுத்தி அமெரிக்காவின் சீ.ஐ.ஏ. அனைத்து அமரிக்கர்களையும் வேவுபார்த்தமையை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்...

இது ஒன்றும் தமது தன்னம்பிக்கையை நிரூபிக்கும் இடமில்லை.

இதற்குள் செல்வதால், சமுகத்தில் உங்கள் தன்னம்பிக்கையை நிரூபிக்க வாய்ப்பே கிடைக்காது.

இதனை விளையாட துணியும் நேரத்தில் ஒரு புத்தகத்தை வாங்கி வாசிக்கலாம்...

புத்தகம் தற்கொலை செய்யச் சொல்வதில்லை... மாறாக உங்களைக் காப்பாற்றுகிறது.


#Blue Whale Challenge - The 50 Tasks - 01


  • Carve a specific phrase on the person’s own hand or arm.
  • Wake up at 4:20 a.m. and watch a scary video (sent by the curator.)
  • Make lengthwise cuts on the person’s own arm.
  • Draw a whale on a piece of paper
  • Write “yes” on the person’s own leg if ready to be a whale. Otherwise, they should cut themselves multiple times.
  • Secret task (written in code.)
  • Scratch (a message) on the person’s own arm.
  • Write a status online about being a whale.
  • Overcome a fear.
  • Get up at 4:20 and go to the roof.
  • Carve a whale on the person’s own hand.
  • Watch scary videos all day.
  • Listen to music the “curator” sends.
  • Cut your lip.
  • Poke the person’s own arm/hand with a needle.
  • Make yourself hurt or sick.
  • Go to a roof and stand on the edge.
  • Stand on a bridge.
  • Climb a crane.
  • At this step, the “curator” somehow checks to see if the participant is trustworthy.
  • Talk with a “whale” on Skype.
  • Sit down on a roof with legs dangling over the edge.
  • Another job that is in code.
  • A secret mission
  • Meet with a “whale.”
  • The “curator” assigns a date that the person will die.
  • Visit a railroad.
  • Do not talk with anyone all day.
  • Give an oath/vow about being a whale

#Blue Whale Challenge - The 50 Tasks - 02


  • Write on a white paper ‘I’m strong, I can do everything I want!’ for 50 times.
  • Take a walk listening some electroswing (parov stelar for instance)
  • Wake up at 10 am, open the window and listen the outside sounds thinking, ‘I’m happy to live’ many times.
  • Go see a sunset while listening some jazz (bossanova, coltrane for instance). Experience its beauty.
  • Try to cook some food you like, eat it with some friends\parents\others you like.
  • Wake up at 5.30 am, have a good breakfast and then go out watch your city waking up. No music here.
  • Try to talk with at least 5 different unknown people about something for at least 5 minutes each.
  • Try to talk with someone who does not like you and try to make him a friend.
  • Take a walk in the afternoon with some music.
  • Take a whole day to do what you like. Life is beautiful; don’t throw it away.
  • Spam these rules to other people.
  • Force yourself to talk with another gamer (or friend or person) about your problems.
  • Try to help another gamer with his/her problems. You can make the difference, you are special.
  • Take a walk with someone, talk about your hopes and desires, and ask about his/her hopes and dreams.
  • Repeat point 1
  • Repeat point 2
  • Repeat point 3
  • Repeat point 4
  • Repeat point 5
  • Repeat point 6
  • Repeat point 7
  • Repeat point 8
  • Repeat point 9
  • Repeat point 10
  • Repeat point 11
  • Repeat point 12
  • Repeat point 13
  • Repeat point 14
  • You are ready for the last test. Think about your progress, write your feelings about all the steps previously addressed, and give it to a person who you think would appreciate it.
  • Live your life happily. You really do not need a curator to control you. You are free, you are special, remember it whenever you are sad and you feel no way out. I love you.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக