அவளின் கடிதம் 3

இத்தனை நாட்கள் முடிந்தப்பின்னரும், உன்னிடம் இருந்து இன்னும் பதில் கிடைக்கவில்லை.

இருந்தும் சிறிதும் வெட்கம் இன்றி இந்த மின்னஞ்சலையும் அனுப்பித் தொலைக்கிறேன்.

என் புத்திக்கு என்னானதோ? தெரியவில்லை.


பதில்தராத உன்னை திமிர்பிடித்த நான் இன்னும் ஏன் வெறுக்கவில்லை?

நீ அழகனா? திமிரனா? எப்படிப்பட்டவன் என்று எதுவும் அறியேன்.. ஆனாலும் ஏதோ ஒன்று உன்னைச் சுற்றித் திரிய வைக்கிறது.

பூர்வ ஜென்மத்தில் நீ என்னை சுற்றித் திரிந்திருக்கக் கூடும்.

இப்போது பழிவாங்குகிறாயா?

அப்படியெல்லாம் பண்ணாதே...

என் திமிரை நானே கொன்றுக் கொள்கிறேன்.

அதை அடக்க நீ முனைய வேண்டியதில்லை.

என் அழகு குறித்த பெருமிதம் எனக்கு இல்லை..

பதிலே அனுப்பாத உனக்கு இத்தனை கடிதங்களை எழுதும் என்னை புரிந்துக் கொள்ள முடியவில்லையா?

நேரில் காணும் ஆண்களிடம் தான் என் திமிர்த்தனம் எல்லாம்...

என் திமிர் பல தருணங்களில் என் பாதுகாப்பு முட்கள்...

என்னை யாரையும் நெருங்கவிடாமல் அதுவே தடுக்கிறது..

ஒன்றைச் சொல்கிறேன்..

என் திமிரை ஓரளவுக்கு மேல் அடக்கி அழித்துவிடாதே...

முள்ளற்ற பூக்களைப் போல், திமிரற்ற என்னை நிறைய பேர் நெருங்கக்கூடும்...

அது உனக்கும் ஆபத்தாகவும் அமையலாம்... ஹ...ஹா...ஹா...

சரி,...

ஏன் எனக்கு பதிலனுப்பாமல் இருக்கிறாய்?

இதற்கு முன்னம் நீ இப்படி இல்லையே..?

நிழற்படம் குறித்த பேச்சு வந்ததுதான் குழப்பங்கள் நிறைய காரணம் என்று நினைக்கிறேன்..

அதனை விட்டுவிடலாம்...

இனி அதைப்பற்றியெல்லாம் பேசேன்...

தயவு செய்து பதிலனுப்பு...

உன்னால் என் வழமைத் தமிழும் கைவராமல் ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறேன்...

மறவாதே...


2 கருத்துகள்: